தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள ஆலமரத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் துரை (வயது 23). இவர் பெங்களூரில் தள்ளுவண்டி வைத்து காய்கறி வியாபாரம் செய்து வந்தார். தற்போது சொந்த ஊரில் கோவில் திருவிழாவிற்காக வந்திருந்தார்.
இந்த நிலையில் துரையை பெற்றோர் தோட்டத்திற்கு சென்று வருமாறு கூறியுள்ளனர். இதற்கு துரை மறுத்து பேசியதாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த பெற்றோர் துரையை திட்டினர்.
இதில் மனவேதனை அடைந்த துரை நேற்று முன்தினம் அரளிவிதையை அரைத்து குடித்தார். இதனால் மயங்கி கிடந்த அவரை உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு அவர் இறந்தார். இது குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.