செய்திகள்

வத்திராயிருப்பு அருகே வி‌ஷம் குடித்து வாலிபர் தற்கொலை

வத்திராயிருப்பு அருகே மது பழக்கம் உள்ள வாலிபர் வாழ்க்கையில் வெறுப்படைந்து வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர்:

சிவகாசியை அடுத்த வத்திராயிருப்பு அருகே உள்ள மேலப்பாளையத்தைச் சேர்ந்தவர் சுரேந்திரன் (வயது 31). இவரது மனைவி தெய்வலட்சுமி. இவர், 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

இந்த நிலையில் சுரேந்திரன் மது பழக்கத்திற்கு அடிமையானார். அடிக்கடி மது குடித்து வந்த இவர் வாழ்க்கையில் வெறுப்படைந்தார்.

மேலும் மன வேதனை அடைந்த சுரேந்திரன், வி‌ஷம் குடித்து மயங்கினார். இதில் அவர் பரிதாபமாக இறந்தார். வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT