செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே என்ஜினீயரிங் மாணவர் வி‌ஷம் குடித்து தற்கொலை

வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த என்ஜினீயரிங் மாணவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

மாலை மலர்

ஸ்ரீவில்லிபுத்தூர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நாச்சியார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவரது மகன் பொம்முராஜ் (வயது20). இவர் சேலத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த சில மாதங்களாக பொம்முராஜூக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. பல மருத்துவர்களிடம் காண்பித்தும் குணமாக வில்லை. இதனால் பொம்முராஜ் விரக்தியுடன் காணப்பட்டார்.

இந்நிலையில் பொம்முராஜ் விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்தார். வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் அருகில் உள்ள கல்குவாரிக்கு சென்று வி‌ஷம் குடித்தார். உயிருக்கு போராடிய அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பொம்முராஜ் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.