செய்திகள்

பெரியகுளம் அருகே கள்ளக்காதல் ஜோடி வி‌ஷம் குடித்து தற்கொலை

பெரியகுளம் அருகே கள்ளக்காதல் ஜோடி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

பெரியகுளம்:

பெரியகுளம் அருகே வடுகப்பட்டி சேடப்பட்டியை சேர்ந்தவர் சங்கனமுத்து. இவருக்கு திருமணம் ஆகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். குடும்பத்துடன் திருப்பூரில் தங்கி அப்பகுதியில் உள்ள கார் ஷோரூம்பில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.

அதே கம்பெனியில் திண்டுக்கல் சின்னாள பட்டியை சேர்ந்த தேவி (வயது32) என்பவரும் பணிபுரிந்து வந்துள்ளனர். தேவிக்கு திருமணம் ஆகி ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர். இருவரும் ஒரே இடத்தில் வேலை செய்ததால் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. பல்வேறு இடங்களுக்கு காதல் ஜோடியினர் தனிமையில் சென்றுள்னனர். இந்த விவகாரம் கம்பெனி உரிமையாளர் மற்றும் ஊழியர்களுக்கு தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து 2 பேரையும் வேலையை விட்டு நிறுத்தி விட்டனர்.

இதனால் மனமுடைந்த கள்ளக்காதல் ஜோடி பெரியகுளம் அருகே வடுகபட்டி- தாமரைக்குளம் சாலையில் உள்ள தென்னந் தோப்பிற்கு வந்தனர். கள்ளக்காதல் விவகாரம் வெளியே தெரிந்ததால் அவமானம் அடைந்த 2 பேரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி தோப்பில் இருந்த மோட்டார் ரூம்பில் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

இன்று காலை அப்பகுதியில் சென்றவர்கள் காதல் ஜோடி பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தென்கரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து 2 பேர் உடலையும் கைப்பற்றி தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.