வேதா இல்லம் 
செய்திகள்

வேதா நிலையத்தை கையகப்படுத்த எதிர்ப்பு- தீபக் வழக்கு ஆக.12ஆம் தேதி விசாரணை

வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற இடத்தை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை எதிர்த்து தீபக், தீபா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஆக.12 தேதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

மாலை மலர்

சென்னை:

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற இடத்தை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை எதிர்த்தும் இழப்பீடு நிர்ணயித்த உத்தரவை எதிர்த்தும் தீபக், தீபா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகளை இரு நீதிபதிகள் விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், தீபக் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வில், ஆகஸ்ட் 12 ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளன.