வீடு புகுந்து நகை, பணம் கொள்ளை 
செய்திகள்

போத்தனூர் அருகே தொழில் அதிபர் வீட்டில் நகை, பணம் கொள்ளை

போத்தனூர் அருகே தொழில் அதிபர் வீட்டில் நகை, பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

கோவை வெள்ளலூர் அருகே உள்ள முத்துமாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் கோபால் (வயது 70). தொழில் அதிபர்.

சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு ராமநாதபுரத்துக்கு வந்து இருந்தார். பின்னர் மாலையில் வீட்டுக்கு திரும்பினார்.

அப்போது வீட்டின் முன்பக்க தகவில் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது. அதிர்ச்சியடைந்த கோபால் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார்.

அறையில் இருந்த பீரோவை திறந்த மர்மநபர்கள் அதில் இருந்த 13 பவுன் தங்க நகைகள், ரூ. 16 ஆயிரம் பணம் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து கோபால் போத்தனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

SCROLL FOR NEXT