மரணம் 
செய்திகள்

போத்தனூர் அருகே தகராறின்போது தவறி விழுந்து முதியவர் பலி

போத்தனூர் அருகே தகராறின்போது தவறி விழுந்து முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

கோவை:

கோவை போத்தனூர் கோனவாய்க்கால் பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 66).

சம்பவத்தன்று இவருக்கும் பக்கத்து வீட்டுக்காரருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது முருகேசன் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகேசன் இறந்தார்.

இது குறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.