ஆயுள் தண்டனை 
செய்திகள்

போக்சோ சட்டத்தில் கைதான கட்டிட தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடியில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட கட்டிட தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

மாலை மலர்

தூத்துக்குடி:

தூத்துக்குடி மேற்கு காமராஜர் நகரை சேர்ந்தவர் ஆழ்வார். இவருடைய மகன் மனோ மாடசாமி (வயது 22), கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 18.07.16 அன்று 16 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி வெளியூருக்கு அழைத்து சென்றுள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் தாய் தூத்துக்குடி தாளமுத்துநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், மனோமாடசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி போக்சோ சட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குமார் சரவணன் குற்றம் சாட்டப்பட்ட மனோ மாடசாமிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் முத்துலட்சுமி ஆஜர் ஆனார்.