கோப்பு படம் 
செய்திகள்

காஷ்மீர்: பணத்துடன் ஏ.டி.எம். இயந்திரத்தை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் அரசு வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் அரசு வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புல்வாமா மாவட்டத்தில் உள்ள புல்வாமா நகரில் அரசுக்கு சொந்தமான பஞ்சாப் நேஷனல் பாங்க் ஏ.டி.எம். மையம் ஒன்றுள்ளது. காவலுக்கு யாரும் இல்லாத இந்த மையத்துக்கு நேற்று பின்னிரவு வந்த மர்ம நபர்கள் பணத்துடன் இருந்த ஏ.டி.எம். இயந்திரத்தை கொள்ளையடித்து சென்றனர்.

இன்று காலை இதுபற்றிய தகவல் அறிந்து விரைந்துவந்த போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் உள்ள பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். நகரின் மையப்பகுதியில் அரசு வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.