செய்திகள்

இமாச்சலப்பிரதேசத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை: 3-ம் தேதி பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்

டெல்லியில் உள்ளதைபோல் இமாச்சலப்பிரதேசத்தில் உருவாக்கப்படும் எய்ம்ஸ் மருத்துமனைக்கு பிரதமர் நரேந்திர மோடி வரும் அக்டோபர் 3-ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார்.

புதுடெல்லி:

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் நவீன வசதிகளுடன் கூடிய பல்நோக்கு மருத்துவமனை டெல்லியில் செயல்பட்டு வருகின்றது. நவீன சிகிச்சைப் பெறுவதற்காக மக்கள் தொலைதூரங்களில் இருந்து டெல்லி வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த சேவையை மேலும் விரிவுபடுத்தி அதிக மக்களுக்கு பயன்தரும் வகையில் இன்னும் சில முக்கிய இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகளை தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், இமாச்சலப்பிரதேச மாநிலத்தின் பிலாஸ்பூர் நகரில் தொடங்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் நரேந்திர மோடி, வருகிற அக்டோபர் 3-ம் தேதி அடிக்கல் நாட்ட உள்ளார் என மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.கே.நட்டா தெரிவித்தார்.

மேலும் இந்த திட்டத்தின் மூலம் இமாச்சலப்பிரதேச மாநில மக்கள் மட்டுமின்றி அண்டை மாநில மக்களும் பயன்பெறுவார்கள் என அவர் கூறினார்.

SCROLL FOR NEXT