கொல்கத்தா:
திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக கிளம்பியுள்ள எதிர்ப்பலைகளையும், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் போராட்டங்களை பற்றியும் அனைவரும் அறிந்ததே.
டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் மாணவர்கள் போலீசாரால் தாக்கப்பட்டதால் பல மாநிலங்களில் உள்ள கல்லூரி மாணவர்களும் பெரும்பாலான இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், மக்களுக்கு விரோதமான தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமைச் சட்டத்தை பிரதமர் மோடி தலையிட்டு ரத்து செய்ய வேண்டும் என மேற்கு வங்காளம் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
கொல்கத்தா நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மம்தா ‘இவற்றை திரும்பப்பெறுவதில் எந்த அரசியல் வெற்றியோ அல்லது தோல்வியோ இல்லை. இது நாட்டைப் பற்றியது. மக்கள் விரோத சட்டமான குடியுரிமை சட்டத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பை நாடு முழுவதும் அமல்படுத்தும் திட்டத்தையும் பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டு ரத்து செய்யவேண்டும்’ என வலியுறுத்தியுள்ளார்.