செய்திகள்

2016-ம் ஆண்டில் 20 ஆயிரம் சிறுமிகள் கற்பழிப்பு - ராகுல் காந்தி வேதனை

சிறுமிகள் கற்பழிக்கப்படும் சம்பவங்கள் பெருகிவரும் நிலையில் இதுதொடர்பான வழக்குகளை விரைவாக விசாரித்து தண்டிப்பதற்கு பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராகுல் வலியுறுத்தியுள்ளார். #Justiceforashifa #KathuaCase #rahulgandi

புதுடெல்லி:

இந்தியாவில் சிறுமிகள் கற்பழிக்கப்படும் சம்பவங்கள் பெருகி வருகின்றன. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி கடந்த ஜனவரி மாதம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இச்சம்பவம் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவங்கள் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட் செய்துள்ளார். அதில், '2016-ம் ஆண்டில் மட்டும் 20 ஆயிரம் சிறுமிகள் கற்பழிக்கப்பட்டுள்ளனர். இது வெட்கப்படக்கூடிய சம்பவமாகும். இது தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரித்து தண்டிப்பதற்கு பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்திருந்தார்.

பிரதமர் மோடி கடந்த 13-ம் தேதி கதுவா மற்றும் உன்னோவ் கற்பழிப்பு சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும், எந்த குற்றவாளியையும் நாங்கள் விட்டுவைக்க மாட்டோம். பாதிக்கப்பட்ட மகள்களுக்கு நியாயம் கிடைக்கும் என தெரிவித்திருந்தார். அதனை சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி, 'பிரதமர் தான் கூறிய படி விரைவாக மகள்களுக்கு நியாயம் கிடைக்க வழிவகுக்க வேண்டும்' என கூறினார். #Justiceforashifa #KathuaCase #rahulgandi

SCROLL FOR NEXT