இந்திய புலி, குட்டிகளுடன்.. 
செய்திகள்

புலிகள் பாதுகாப்பாக வாழ்வதற்கு உகந்த இடமாக இந்தியா மாறியுள்ளது - பிரதமர் மோடி பெருமிதம்

புலிகளின் எண்ணிக்கை ஐந்தாண்டுகளில் இருமடங்காக அதிகரித்துள்ளதை இன்று சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, புலிகள் பாதுகாப்பாக வாழ்வதற்கு உகந்த இடமாக இந்தியா மாறியுள்ளதாக குறிப்பிட்டார்.

மாலை மலர்

நாடு முழுவதும் உள்ள வனப்பகுதிகளில் உள்ள புலிகளின் எண்ணிக்கை தொடர்பாக கடந்த (2018) ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு விவரத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் வெளியிட்டார்.

கடந்த 2014-ம் ஆண்டில் 1400 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை தற்போது 2,977 ஆக அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டிய மோடி, உலகளாவிய அளவில் அதிகமாகவும், பாதுகாப்பாகவும் புலிகள் வாழ்வதற்கு உகந்த நாடுகளில் ஒன்றாக இந்தியா இருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.