செய்திகள்

சியாமா பிரசாத் முகர்ஜி நினைவு தினம் - பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் அஞ்சலி

பாரதிய ஜனசங்க நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜியின் நினைவு தினத்தில் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

மாலை மலர்

புதுடெல்லி:

பாரதிய ஜனசங்கத்தின் நிறுவனரான டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.

தலைநகர் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் சியாமா பிரசாத்தின் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

பாஜக தேசிய தலைவரும், உள்துறை மந்திரியுமான அமித் ஷா, பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இதேபோல், சியாமா பிரசாத் முகர்ஜியின் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நினைவு கூர்ந்தார். இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி ஒரு தீவிர தேசபக்தர். சிறந்த தேசியவாதி. இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் என பதிவிட்டுள்ளார்.