நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷிய உதவியுடன் நிறுவப்பட்டுள்ள அணுமின்நிலையத்தில் தலா 1,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் 2 யூனிட்டுகள் செயல்பட்டு வருகின்றன. இதேபோல் ரஷிய அதிபர் புதினும், பிரதமர் மோடியும் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் கூட்டாக அடிக்கல் நாட்டிய 3, 4-வது யூனிட்டுகள் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.
இதற்கிடையே, 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இருதலைவர்களும் சந்தித்தபோது, கூடங்குளத்தில் 5 மற்றும் 6-வது யூனிட்டுகள் அமைக்கப்படும் என்று கூட்டாக அறிவித்தனர். இது தொடர்பான பொது கட்டமைப்பு ஒப்பந்தம் கடந்த டிசம்பர் மாதமே இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தாகி இருக்கவேண்டும்.
ஆனால், ரஷியா-பாகிஸ்தான் இடையே நெருக்கம் அதிகமானதாலும், அணு பொருட்கள் விற்பனை நாடுகள் குழுவில் இந்தியா இடம் பெறுவதற்கு ரஷியா அழுத்தம் கொடுக்கவேண்டும் என்று வற்புறுத்தி வருவதாலும் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாவது தாமதம் ஆகி வந்தது.