செய்திகள்

ராஞ்சியில் இன்று நடைபெறும் சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள பிரபாத் தாரா பள்ளி மைதானத்தில் இன்று நடைபெறும் சர்வதேச யோகா தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார்.

ராஞ்சி:

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள பிரபாத் தாரா பள்ளி மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் சர்வதேச யோகா தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார்.

இதற்காக பிரதமர் மோடி நேற்று இரவே ராஞ்சிக்கு சென்று கவர்னர் மாளிகையில் தங்கினார். இன்று காலை 6 மணிக்கு அவர் யோகா தின நிகழ்ச்சியில் கலந்துகொண்டு யோகாசனம் செய்கிறார்.

அவருடன் மேடையில் ஜார்கண்ட் மாநில முதல்-மந்திரி ரகுபர்தாஸ், கவர்னர் திரவுபதி முர்மு, மத்திய ஆயுஷ் மந்திரி யெஸ்ஸோ நாயக், மாநில சுகாதார மந்திரி ராமச்சந்திர சந்திரவன்ஷி ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில் 40 ஆயிரம் பேர் கலந்துகொண்டு யோகாசனம் செய்கிறார்கள். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும், தேவையான அடிப்படை வசதிகளும் மாநில அரசால் செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்ப 28 பெரிய திரைகளும் வைக்கப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT