இந்தியா, சீனா, பிரேசில், ரஷியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டு ‘‘பிரிக்ஸ்’’ எனும் அமைப்பு செயல்பட்டு வருகிறது. பிரிக்ஸ் அமைப்பு நாடுகளின் தலைவர்கள் ஆண்டுக்கு ஒரு தடவை சந்தித்து பேசுவது வழக்கம். அவ்வகையில் 9-வது பிரிக்ஸ் மாநாடு சீனாவின் சியாமென் நகரில் இன்று முதல் 5-ம் தேதி வரை நடைபெற உள்ளது.