ஆஸ்திரேலியாவின் கோல்ட்கோஸ்ட் நகரில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் இந்தியா 26 தங்கம், 20 வெள்ளி மற்றும் 20 வெண்கலப்பதக்கங்களுடன் உலக அளவில் மூன்றாவது இடத்தை பிடித்தது. இந்திய வீரர்-வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி பதங்கங்களை பெற்று தந்தனர்.
இந்நிலையில், அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் பிரதமர் மோடி வீரர்-வீராங்கனைகளை நேரில் சந்தித்தார். பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை மந்திரி ராஜ்யவர்தன் சிங் பங்கேற்றார். அவர்களுடன் பிரதமர் மோடி உரையாற்றினார். பின்னர் அனைவரும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, 'விளையாட்டுத்துறையில் வீரர்-வீராங்கனைகள் பதக்கங்கள் வாங்குவது அனைவரிடமும் வெற்றி பெற வேண்டும் என்ற உத்வேகத்தை ஏற்படுத்தும்' என கூறினார். #NarendraModi #CommonwealthGames2018