செய்திகள்

மூன்று நாடுகள் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் பிரதமர் மோடி

போர்ச்சுக்கல், அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய நாடுகளின் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து பிரதமர் நரேந்திர மோடி நாடு திரும்பினார்.

போர்ச்சுக்கல், அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு 4 நாட்கள் சுற்றுப்பயணமாக  பிரதமர் மோடி  புறபட்டுச்சென்றார். தனது சுற்றுப்பயணத்தின் போது போர்ச்சுக்கல் பிரதமர் அந்தோணியா கோஸ்டாவை சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்த்தை நடத்தினார். பின்னர் இருநாடுகளுக்கும் இடையே, 11 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.

பின்னர் போர்ச்சுக்கல் பயணத்தை நிறைவு செய்து பிரதமர் மோடி அங்கிருந்து அமெரிக்கா புறப்பட்டார். உலக நாடுகளின் கவனத்தை பிரதமர் மோடியின்  அமெரிக்க பயணம் ஈர்த்தது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை முதல் முறையாக சந்தித்த பிரதமர் மோடி விரிவான ஆலோசனை நடத்தினார். தங்கள் நாடுகளை வலுவாக்கும் நோக்கில்  பொருளாதார ஒத்துழைப்பு இருநாடுகளுக்கும் இடையே அதிகரிப்பது குறித்து இந்த சந்திப்பின் போது ஆலோசிக்கப்பட்டது.


நிறைவாக செவ்வாய்க்கிழமை பிரதமர் மோடி நெதர்லாந்து சென்றார். நெதர்லாந்து பிரதமர் மார்க் ரோட்டேவை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே சமூக பாதுகாப்பு, நீர் மற்றும் கலாசார ஒத்துழைப்பு என 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயிற்று.

SCROLL FOR NEXT