மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இது விவசாயிகளுக்கு எதிரானது. இதனால் மூன்று சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். ஓராண்டிற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டனர். என்றாலும் மத்திய அரசு மூன்று சட்டசங்களை திரும்ப பெறுவதில்லை என்பதில் திட்டவட்டமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் உள்ள பன்வீர் பூர் பகுதியில் நேற்று அம்மாநில துணை முதல்வர் மற்றும் மத்திய இணை மந்திரி ஆகியோர் அரசு விழாவில் கலந்து கொள்ள சென்றனர். அப்போது விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். அப்போது திடீரன மத்திய அமைச்சர் உடன் வந்த கார் ஒன்று விவசாயிகள் கூட்டத்திற்குள் நுழைந்தது. இதனால் போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் வேளாண் சட்டத்திற்கான மத்திய அரசின் கூட்டணியில் இருந்து வெளியேறிய சிரோமணி அகாலி தளத்தின் தலைவர் சுக்பிர் சிங் பாதல் ‘‘பிரதமர் மோடி தனது ஆணவ போக்கை கைவிட வேண்டும் என வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன். விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்க வேண்டும். மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும். இதனால் விவசாயிகளின் உயிர்களை காப்பாற்ற முடியும்’’ என்றார்.
இதையும் படியுங்கள்... முறைகேடான நிதி முதலீடு - தெண்டுல்கரின் பெயரும் பட்டியலில் இடம் பெற்றுள்ளது