புதுடெல்லி:
நாட்டில் கடமையாற்றியபோது மரணம் அடைந்த போலீஸ் படையினரின் நினைவுதினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் போலீசாருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
அதில் அவர், ‘‘கடமையின்போது மரணம் அடைந்த நமது துணிச்சல் மிக்க போலீஸ் படையினருக்கும், அவர்களது குடும்பத்துக்கும் நாம் வணக்கம் செலுத்துவோம். நமது போலீசார் விடாமுயற்சியுடன் தங்கள் கடமையை ஆற்றி வருகிறார்கள். அவர்களது துணிவு நம்மை எப்போதும் ஊக்குவிக்கும்’’ என்று கூறியுள்ளார்.