பிரதமர் மோடி 
செய்திகள்

சீன சமூக ஊடகமான ‘வெய்போ’வில் இருந்து விலகினார் மோடி

சீனாவின் 59 செயலிகளை இந்தியா தடை செய்திருக்கும் நிலையில், சீனாவின் சமூக ஊடகமான ‘வெய்போ’வில் இருந்து விலகினார் பிரதமர் மோடி.

லடாக்கின் கல்வான் பகுதியில் இந்தியா -சீனா வீரர்களுக்கு இடையே நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதனிடையே இந்தியாவில் சீன பொருட்களை விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும் என கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து சுமார் 59 சீன 'ஆப்'களை இந்திய அரசு தடைசெய்தது.

பிரதமர் மோடி கடந்த காலங்களில் சீனாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார். அப்போது வி.ஐ.பி.,க்கள் பயன்படுத்தும் வெப் தலமான ‘வெய்போ’வில் தனது கணக்கை துவங்கியிருந்தார். தற்போதுள்ள சூழ்நிலையில் தொடர்ந்து பிரதமர் மோடியும் சீனாவின் வெப் தலமான வெய்போவில் துவக்கி இருந்த கணக்கில் இருந்து விலகினார்.

பிரதமர் மோடியின் வெய்போ கணக்கில் 115 பதிவுகள் இருந்தன. அதில் ஃப்ரோபைல் போட்டோ, போஸ்ட்டுகள், கமெண்ட்கள் நீக்கப்பட்டன. மேலும் அக்கவுண்ட்-ஐ நீக்க முடிவு செய்தார். ஆனால் அதில் சிக்கல் இருப்பதால் உடனடியாக நீக்க முடியவில்லை.

வெய்போ பயனாளிகள் அக்கவுண்ட்-ஐ நீக்க அனுமதி கொடுப்பதில்லை. சீன அதிபருடன் சேர்ந்து இருக்கும் போட்டோ இரண்டு மட்டும் இருப்பதால் அவை அகற்றவில்லை. சீன அதிபர் படத்தை அனுமதியில்லாமல் வெய்போ நீக்குவதில்லை. அடிப்படையான அனுமதிக்கு சீனா காலம் தாழ்த்துவதால் அக்கவுண்ட்-ஐ நீக்க முடியவில்லை என்று சொல்லப்படுகிறது.

2015-ல் பிரதமர் மோடி வெய்போவில் இணைந்தார். 2,44,000 பேர் அவரை பின்தொடர்கிறார்கள். பெரும்பாலும் ஜூன் 15-ந்தேதி ஜின்பிங்கிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூற பயன்படுத்துவார். இந்த வருடம் லடாக் மோதலால் வாழ்த்து கூறவில்லை.

SCROLL FOR NEXT