சவுதி அரேபியா மன்னருடன் பிரதமர் மோடி சந்திப்பு 
செய்திகள்

சவுதி அரேபியா மன்னருடன் பிரதமர் மோடி சந்திப்பு

இருநாள் அரசுமுறை பயணமாக ரியாத் நகருக்கு சென்றுள்ள பிரதமர் மோடி சவுதி அரேபியா மன்னர் சல்மான் பின் அப்துல் அஜிஸ் அல்சவுத்-ஐ சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

ரியாத்:

சவுதி அரேபியா மன்னரின் அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி இருநாள் அரசுமுறை பயணமாக டெல்லியில் இருந்து நேற்றிரவு சவுதி அரேபியா நாட்டுக்கு புறப்பட்டு சென்றார். 

இன்று பிற்பகல் சவுதி அரேபியா நாட்டின் சுற்றுச்சூழல், நீர்வளம் மற்றும் வேளாண்மைத்துறை மந்திரி அப்துல்ரஹ்மான் பின் அப்துல்மோஷேன் அல்-ஃபட்லி மற்றும் எரிசக்தி துறை மந்திரி அப்துல் அஜிஸ் பின் சல்மான் அல் சவுத் ஆகியோரையும் சந்தித்த பிரதமர் மோடி பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

இன்று இரவு பிரதமர் மோடி சவுதி அரேபியா மன்னர் சல்மான் பின் அப்துல் அஜிஸ் அல்சவுத்-ஐ சந்தித்து விரிவான ஆலோசனை நடத்தினார்.

ரியாத் நகரில் நடைபெற்று வரும் எதிர்கால முதலீட்டு முன்னெடுப்பு கருத்தரங்கில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.

SCROLL FOR NEXT