ஜோர்டான் மன்னருடன் பிரதமர் மோடி 
செய்திகள்

சவுதி அரேபியாவில் ஜோர்டான் மன்னருடன் பிரதமர் மோடி ஆலோசனை

சவுதி அரேபியா மன்னரின் அழைப்பை ஏற்று இருநாள் அரசுமுறை பயணமாக ரியாத் நகருக்கு சென்றுள்ள பிரதமர் மோடி ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

சவுதி அரேபியா மன்னரின் அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி இருநாள் அரசுமுறை பயணமாக டெல்லியில் இருந்து நேற்றிரவு சவுதி அரேபியா நாட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

இந்த  பயணத்தின்போது, சவுதி அரேபியா மன்னர் சல்மான் பின் அப்துல் அஜிஸ் அல்சவுத் மற்றும் இளவரசர் முகமது பின் சல்மான் அல்சவுத்தை மோடி சந்தித்து பேசுகிறார்.

சவுதி அரேபியாவின் சில மந்திரிகளையும் சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பின்போது எரிசக்தி, நிதி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடி இன்று ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.