அயோத்தி புறப்பட்ட பிரதமர் மோடி 
செய்திகள்

அயோத்தி ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்ட புறப்பட்டார் பிரதமர் மோடி

அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜைக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் நரேந்திர மோடி விமானம் மூலம் புறப்பட்டார்.

மாலை மலர்

அயோத்தி:

அயோத்தி ராமர் கோவிலுக்கான பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

கொரோனா அச்சுறுத்தலால் முக்கிய பிரபலங்கள், சாமியார்கள் என 175 பேருக்கு மட்டுமே அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது. மேலும் விழாவுக்கான ஏற்பாடுகளும், பாதுகாப்பு நடவடிக்கைகளும் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜைக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் நரேந்திர மோடி விமானம் மூலம் புறப்பட்டார்.