செய்திகள்

பிலாஸ்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை: பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

இமாசலப்பிரதேசம் மாநிலம் பிலாஸ்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.

சிம்லா:

பிரதமர் நரேந்திர மோடி இன்று இமாசலப்பிரதேச மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். டெல்லியில் இருந்து பிலாஸ்பூர் சென்றடைந்த மோடியை மாநில கவர்னர் ஆச்சார்யா தேவ் விராட், முதல் மந்திரி வீரபத்ர சிங் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர்.

பின்னர், பிலாஸ்பூரில் எய்ம்ஸ் மருத்துமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதைத் தொடர்ந்து அவர் உனா நகரில் அமைய உள்ள ஐ.ஐ.ஐ.டி. கட்டுமானப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் கவர்னர் ஆச்சார்யா தேவ் விராட், முதல் மந்திரி வீரபத்ர சிங் மற்றும் மத்திய மந்திரி ஜே.பி.நட்டா ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியின் போது முதல்-மந்திரி வீரபத்ர சிங், மோடிக்கு சால்வையை பரிசாக வழங்கினார்.

மேலும், கங்காரா மாவட்டத்தில் உள்ள கந்தோரி பகுதியில் இரும்பு ஆலையை திறந்து வைக்கிறார். அதன்பின்னர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்.

பிரமர் மோடி மூன்றாவது முறையாக இமாசலப்பிரதேசம் மாநிலத்திற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT