செய்திகள்

இந்தியாவுக்கு வாருங்கள்: தென் கொரியா புதிய அதிபர் மூன்-க்கு மோடி அழைப்பு

இந்தியாவுக்கு விரைவில் வாருமாறு தென் கொரியா புதிய அதிபர் மூன் ஜயே இன்-க்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

மாலை மலர்

புதுடெல்லி:

தென் கொரியா அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட மூன் ஜயே-இன் 41.1 சதவீத வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். இதனையடுத்து நேற்று அதிபராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிலையில், தென் கொரியாவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள மூன் ஜயே இன்-க்கு இந்தியாவுக்கு விரைவில் வருமாறு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். தொலைபேசியில் மூன் இடம் இன்று பேசிய போது இந்த அழைப்பை மோடிவிடுத்தார்.

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் மோடி, ”தற்போது தான் என்னுடைய நண்பர் அதிபர் மூன் ஜயே-இன்னிடம் பேசினேன். அவரது வெற்றிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தேன். இந்தியாவுக்கு விரைவில் வருமாறு அழைப்பு விடுத்தேன். சேர்ந்தே வெற்றி பெறுவோம்” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற மூன்னுக்கு நேற்று ஆங்கிலம் மற்றும் கொரியன் மொழிகளில் பிரதமர் மோடி வாழ்த்துச் செய்திகளை அனுப்பி இருந்தார்.