செய்திகள்

கர்நாடகம்: பிடார் - கலாபுரகி இடையே புதிய ரெயில் பாதை - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

கர்நாடக மாநிலத்தில் பிடார் - கலாபுரகி இடையே 110 கிலோ மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய ரெயில் பாதை போக்குவரத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.

பெங்களூரு:

கர்நாடக மாநிலத்தில் உள்ள பிடார் - கலாபுரகி இடையிலான 250 கிலோ மீட்டர் பயண தூரத்தை ஆந்திராவை சுற்றிச் செல்வதை குறைக்கும் வகையில் இரு நகரங்களுக்கு இடையில் குறுகிய தூரத்தில் ரெயில் பாதை அமைக்கும் பணிகள் கடந்த 17 ஆண்டுகளாக நடைபெற்று வந்தன.

சுமார் 110 கிலோ மீட்டர் தூரத்தில் பிடார் - கலாபுரகி இடையில் பாதை அமைக்கும் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.

இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, பிடார் - கலாபுரகி இடையிலான புதிய ரெயில் பாதையை இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். ரெயில்வே மந்திரி பியுஷ் கோயல் உள்பட பலர் உடனிருந்தனர்.