செய்திகள்

பிரணாப் முகர்ஜிக்கு ஃபேர்வல் - நினைவு பரிசு அளித்த பிரதமர் மோடி

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் 25-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அவருக்கு வழி அனுப்பும் விழா நேற்று நடைபெற்றது. இதில் பிரணாப் முகர்ஜிக்கு பிரதமர் மோடி நினைவுப் பரிசு ஒன்றினை அளித்தார்.

மாலை மலர்

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் 25-ம் தேதியுடன் முடிகிறது. பிரணாப்பின் பதவிக்காலம் முடியுள்ள நிலையில், கடந்த 17-ம் தேதி இந்தியாவின் 14- வது ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது.

இதில் பா.ஜ.க வேட்பாளரான ராம்நாத் கோவிந்த் 65 சதவிகித வாக்குகள் பெற்று நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் குடியரசுத் தலைவராக வரும் 25-ம் தேதி பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில், பதவிக்காலம் முடிவடைய உள்ள பிரணாப் முகர்ஜிக்கு டெல்லியில் இருக்கும் ராஷ்டிரபதி பவனில் நேற்று 'ஃபேர்வல்' நிகழ்ச்சி நடைபெற்றது. பிரதமர் மோடி அளித்த இந்த விருந்தில் புதிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் கலந்து கொண்டார்.