செய்திகள்

இந்திய பெண்கள் சிறப்பாக செயல்பட முடியும் என்ற செய்தியை அனுப்பி உள்ளார் மோடி: நிர்மலா சீதாராமன் பேட்டி

எப்போதும் பெண்களுக்கு ஆதரவு அளித்து வரும் பிரதமர் மோடி, இந்திய பெண்கள் சிறப்பாக செயல்பட முடியும் என்ற செய்தியை இன்று அனுப்பி உள்ளதாக பாதுகாப்புத்துறை மந்திரியாக பதவியேற்ற நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மாலை மலர்

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரிசபை இன்று மாற்றியமைக்கப்பட்டது. மத்திய வர்த்தக துறையில் இணை மந்திரியாக பணியாற்றிய நிர்மலா சீதாராமன் கேபினட் மந்திரியாக பதவியேற்றுள்ளார். அதுவும் பாதுகாப்புத்துறை மந்திரியாக நிர்மலா சீதாராமன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதன்மூலம், பாதுகாப்புத் துறையின் முழுநேர முதல் பெண் மந்திரி என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார். முன்னதாக இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது பாதுகாப்பு துறையை கூடுதலாக சில காலம் கவனித்தது குறிப்பிடத்தக்கது.