செய்திகள்

அஜ்மீர் தர்காவுக்கு பிரதமர் மோடி மலர்ப்போர்வை வழங்கினார்

அஜ்மீரில் உள்ள காஜா மொய்னுத்தீன் சிஸ்தியின் 807-வது ‘உருஸ்’ கொண்டாட்டத்தை முன்னிட்டு பிரதமர் மோடி இன்று மலர்ப்போர்வையை காணிக்கையாக வழங்கினார். #Modihandedchaadar #AjmerDargah #AjmerDargahUrs

மாலை மலர்

இஸ்லாமிய மார்க்கத்தைச் சேர்ந்த சூபி அறிஞரான காஜா மொய்னுத்தீன் சிஸ்தியின் நினைவிடம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் நகரில் அமைந்துள்ளது.

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் காஜா கரிபுன்நவாஸ் எனவும் அழைக்கப்படும் காஜா மொய்னுத்தீன் சிஸ்தியின் 807-வது ‘உருஸ்’ கொண்டாட்டங்கள் தற்போது அஜ்மீர் நகரில் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த உருஸ் விழாவின்போது அவரது நினைவிடத்தின்மீது மலர்ப்போர்வைகளையும், சால்வைகளையும் அணிவித்து, மகிழும் மரபினை இங்குள்ள முஸ்லிம்களுடன், இந்து மக்களும் கடைபிடித்து வருகின்றனர்.

அவ்வகையில், காஜா மொய்னுத்தீன் சிஸ்தியின் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி சில ஆண்டுகளாக மலர்ப்போர்வைகளை காணிக்கையாக செலுத்தி வருகிறார்.