செய்திகள்

3 சட்டமன்ற இடைத்தேர்தல்களில் பா.ஜ.க. வெற்றி: பிரதமர் மோடி பெருமிதம்

இரு மாநிலங்களில் நடைபெற்ற 3 சட்டமன்ற இடைத்தேர்தல்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

புதுடெல்லி:

இரு மாநிலங்களில் நடைபெற்ற 3 சட்டமன்ற இடைத்தேர்தல்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் சிகந்தரா தொகுதிக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் அருணாசலப்பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள லிகாபலி, பக்கே தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. 

இந்த மூன்று சட்டமன்ற இடைத்தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது.  இந்த இடைத்தேர்தல்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்நிலையில், இரு மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு பிரதமர் மோடி டுவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மேலும், மேற்கு வங்காளத்தின் சபாங் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பா.ஜ.க. குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளது எனவும் பதிவிட்டுள்ளார்.