மூன்று நாள் அரசுமுறை பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். அதன் ஒரு பகுதியாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுக்கு இந்தியா சார்பில் இரு நினைவு பரிசுகளை பிரதமர் மோடி வழங்கினார்.
கேரளாவில் இருந்து கொண்டுவரப்பட்ட இரு பரிசுகளை பிரதமர் மோடி வழங்கினார். 9-10 நூற்றாண்டுகளை சேர்ந்த யூதர்களின் வரலாற்றை பிரதிபலிக்கும் இரு காப்பர் தகடுகள் நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது. இதில் முதல் காப்பர் தகடு கொச்சினின் பிரபல தேவாலயத்தில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த காலகட்டத்தில் யூதர்களின் தலைவனான ஜோசப் ராபனுக்கு, அப்போதைய ஆட்சியில் இருந்த இந்து அரசர் சேரமான் பெருமாளால் (பாஸ்கர ரவி வர்மா) வழங்கப்பட்டது.
பின்னாளில் ஷிங்க்ளியின் இளவரசனாக ஜோசப் ராபன் முடிசூட்டப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஷிங்க்ளிக்கு சரிநிகரான யூதர்களின் விருப்பமான மற்றும் கலாச்சார ஸ்தலமாக ரங்கனூர் விளங்கியது. இந்த காப்பர் தகடுகள் கொச்சியின் மட்டான்சேரியில் உள்ள பாரதேசி சினகோக் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டது.
இதில் இரண்டாவது தகடு, இந்தியாவுடனான யூதர்களின் வர்த்தகம் குறித்த பெருமையை உடையது. அதுமட்டுமின்றி கொல்லம் மற்றும் மேற்கு ஆசியாவுடனான இந்திய வர்த்தகத்தையும் விளக்குகிறது. மேற்கு ஆசிய வர்த்தகத்தில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சோராஸ்டிரியன்களுடன் யூதர்களும் வர்த்தகம் செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.