செய்திகள்

ஜனாதிபதி உரை மீதான விவாதத்துக்கு பிரதமர் இன்று பதில் அளிக்கிறார்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் ஜனாதிபதி உரை மீதான விவாதத்துக்கு மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பதில் அளிப்பார் என்று பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவித்தன.

மாலை மலர்

புதுடெல்லி:

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளில், இரு அவைகளும் அடங்கிய கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது நேற்று விவாதம் தொடங்கியது. அந்த விவாதத்துக்கு மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பதில் அளிப்பார் என்று பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவித்தன.

அப்போது, வேலையில்லா திண்டாட்டம், பொருளாதார நிலை உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதில் அளிப்பதுடன், அரசின் சாதனைகளையும் எடுத்துரைப்பார் என்று தெரிகிறது. அவரது பதிலுரைக்கு பிறகு, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்படும்.

இதனால், பா.ஜனதா உறுப்பினர்கள் அனைவரும் இன்றும், நாளையும் சபைக்கு தவறாமல் வரவேண்டும் என்று கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.