கோப்புப்படம் 
செய்திகள்

பிரதமர் மோடி தலைமையில் புதன்கிழமை மத்திய அமைச்சரவை கூட்டம்

குளிர்கால கூட்டத்தொடர் வருகிற 29-ந்தேதி தொடங்க இருக்கும் நிலையில், புதன்கிழமை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

மாலை மலர்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வருகிற 29-ந்தேதி தொடங்க இருக்கிறது. குளிர்கால கூட்டத்தொடர் குறித்து ஆலோசனை நடத்த பிரதமர் மோடி தலைமையில் வெள்ளிக்கிழமை (26-ந்தேதி) அமைச்சரவை கூட்டம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் வருகிற புதன்கிழமை (24-ந்தேதி) மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப்பெற முடிவு செய்துள்ளதாக அறிவித்தார்.

ஆனால், விவசாயிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் வருகிற குளிர்கால கூட்டத்தொடரிலேயே மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப்பெற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த அமைச்சரவை கூட்டத்தில் வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு, அனுமதி அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... கூட்டத்தின் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்: தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம்