புதுடெல்லி:
நாட்டின் 72-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடி ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்போது, மத்திய பா.ஜ.க. அரசின் செயல்பாடுகள், சாதனைத் திட்டங்கள் மற்றும் நாட்டின் வளர்ச்சி குறித்து பேசினார். அவரது உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
மீன் உற்பத்தியில் இந்தியா உலக அளவில் 2-வது நாடாக திகழ்கிறது. வெறும் வாக்குறுதியாக மட்டுமே இருந்த ஒரு பதவி ஒரு ஓய்வூதியம் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டம் செப்டம்பர் 25-ம் தேதி தொடங்கப்படும். இந்த திட்டம் 50 கோடி இந்தியர்களுக்கு உதவியாக இருக்கும்.
இந்திய பாஸ்போர்ட்டின் வலிமை இப்போது அதிகரித்துள்ளது. புதிய விமான நிலையங்கள், சாலைகள் கட்டமைக்கப்பட்டு வருகின்றது. 2022-ல் சொந்த செயற்கை கோள் மூலம் இந்தியர்களை விண்ணுக்கு அனுப்ப முயன்று வருகிறோம். மனிதனை விண்ணுக்கு அனுப்பிய 4-வது நாடாக இந்தியா மாறும்.
இவ்வாறு அவர் பேசினார்.