செய்திகள்

உற்பத்தி செலவைப்போல் ஒன்றரை மடங்கு அளவுக்கு நெல்லுக்கான ஆதார விலை உயர்த்தப்படும்- பிரதமர் அறிவிப்பு

நெல் உள்ளிட்ட கரிப் பருவ சாகுபடி தானியங்களின் குறைந்தபட்ச ஆதார விலை, அவற்றின் உற்பத்தி விலையைப்போல் ஒன்றரை மடங்கு அளவுக்கு உயர்த்தப்படும் என்று பிரதமர் மோடி கூறினார்.

மாலை மலர்

கரும்பு உற்பத்தி அதிகமாக நடைபெறும் உத்தரபிரதேசம், மராட்டியம், கர்நாடகா, உத்தரகாண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 140 கரும்பு விவசாயிகளை தனது வீட்டுக்கு வரவழைத்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று உரையாடினார். கடந்த 10 நாட்களில் அவர் விவசாயிகளுடன் உரையாடுவது, இது 2-வது தடவை ஆகும்.

இந்த உரையாடலின்போது, பிரதமர் கூறியதாவது:-

அதுபோல், 2018-2019 சர்க்கரை பருவத்துக்கான கரும்பின் நியாய நிலை, இன்னும் 2 வாரங்களில் அறிவிக்கப்படும். அந்த விலை, முந்தைய சர்க்கரை பருவ விலையை விட அதிகமாக இருக்கும். மேலும், 9.5 சதவீத பிழிதிறன் கொண்ட கரும்பை அளிக்கும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். கடந்த 10 நாட்களில், விவசாயிகளுக்கான கரும்பு நிலுவைத்தொகை ரூ.4 ஆயிரம் கோடிக்கு மேல் வழங்கப்பட்டுள்ளது. அதுபோல், மாநில அரசுகளையும் நிலுவைத்தொகையை வழங்குமாறு கூறியுள்ளோம்.

விவசாயிகள் தங்கள் வருமானத்தை பெருக்க சொட்டுநீர் பாசனம் மற்றும் புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்த வேண்டும். சோலார் குழாய் களை பயன்படுத்த வேண்டும். வயல்களில் சூரியசக்தி தகடுகளை நிறுவ வேண்டும்.

சாகுபடியின் தரத்தை உயர்த்த உரங்களின் பயன்பாட்டை குறைத்துக்கொண்டு, பண்ணை கழிவுகளை உபயோகியுங்கள்.