புது டெல்லி:
மக்களவை தேர்தலின் போது கடந்த மார்ச் 27ம் தேதி மக்களிடம் உரை நிகழ்த்திய மோடி, ஏசாட் ஏவுகணை மூலம் விண்வெளியில் உளவு பார்த்த செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்தியதாக அறிவித்தார்.
தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி மீண்டும் மத்தியில் ஆட்சி அமைத்த மோடி தலைமையிலான அரசு, சமீபத்தில் முத்தலாக் தடை மசோதா, என்ஐஏ மசோதா, மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதா, ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது.