செய்திகள்

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி

அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல தலைவர்கள், பிரபலங்கள் இன்று தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர். #HanumanJayanti

ராமாயண காவியத்தில் இணையற்ற இடத்தைப் பிடித்தவர் அனுமன். அறிவு, உடல் வலிமை, துணிச்சல், புகழ், ஆரோக்கியம், வாக்கு சாதுரியம், வீரம் ஆகிய அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்றவர். ராமனின் சேவகனாக வாழ்ந்த அனுமன் சீதாதேவியால் ‘சிரஞ்சீவி’ பட்டம் பெற்றவர். அவரது பிறப்பு மகத்துவம் மிகுந்தது. அவர் பிறந்த தினமே ‘அனுமன் ஜெயந்தி’யாக இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் அனுமன் ஜெயந்தியான இன்று அனுமன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். இந்நாளில் பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 'இந்த மங்களகரமான நன்நாளில் அனைவருக்கும் அனுமன் ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்' என தெரிவித்துள்ளார்.


மேலும், கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா, சேவாக், விவிஎஸ் லக்‌ஷமண் மற்றும் சினிமா பிரபலங்கள் உட்பட பல அரசியல் தலைவர்கள் அனுமன் ஜெயந்தி வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர்.

SCROLL FOR NEXT