செய்திகள்

சிவில் சர்வீஸ் தேர்வில் வென்றவர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு

2017ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். #PMModi

புதுடெல்லி:

2017-ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் தமிழகத்தில் இருந்து 60க்கும் மேற்பட்டோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.  

தமிழகத்தை சேர்ந்த கீர்த்திவாசன் இந்திய அளவில் 27-வது இடமும், தமிழக அளவில் முதலிடமும் பெற்று சாதனை படைத்துள்ளார். இதேபோல், சென்னையை சேர்ந்த மதுபாலன் இந்திய அளவில் 71-வது இடமும், தமிழக அளவில் 2-ம் இடமும் பெற்றுள்ளார். அகில இந்திய அளவில் ஐதராபாத்தை சேர்ந்த அனுதிப் துரிசெட்டி முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். 

இந்நிலையில், 2017ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பிரதமர் நரேந்தி மோடி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் டுவிட்டரில் கூறுகையில், சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். உங்களது விடாமுயற்சியால் இந்த வெற்றி கிடைத்துள்ளது. இதில் தேர்வு செய்யப்பட்ட இளைஞர்கள் பொது வாழ்வில் அவர்களது பணிகள் சிறக்க வேண்டும் என வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார். #PMModi #Tamilnews

SCROLL FOR NEXT