புதுடெல்லி:
உலகின் 3-வது மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கடற்கரை நகரான கோல்ட்கோஸ்டில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் 71 நாடுகளை சேர்ந்த 4,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 218 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இன்று நடைபெற்ற மகளிருக்கான பளுதூக்குதல் போட்டியில் ( 48 கிலோ) இந்தியாவின் சாய்கோம் மீராபாய் சானு தங்கப்பதக்கம் வென்றார். ஆடவருக்கான பளு தூக்குதல் போட்டியில் (56 கிலோ) இந்தியாவின் குருராஜா வெள்ளிப்பதக்கம் வென்றார். இப்பிரிவில் 28 வயதான குருராஜா மொத்தம் 249 கிலோ எடையை தூக்கி இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
இந்நிலையில், காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற சாய்கோம் மீராபாய் சானு மற்றும் குருராஜா ஆகியோர்க்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து மோடி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ‘காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியாவின் முதல் தங்கத்தை வென்றதற்காகவும், மூன்று காமன்வெல்த் சாதனைகளை உடைத்து சாய்கோம் மீராபாய் சானுவுக்கு வாழ்த்துக்கள். இந்த சாதனைகளால் இந்தியா மகிழ்ச்சி அடைந்துள்ளது’.
மற்றொரு வாழ்த்து செய்தியில் காமன்வெல்த் போட்டியில் முதல் பதக்கம் வென்ற குருராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். #PMModi #CommonwealthGames18 #Gururaja #SaikhomMirabaiChanu