செய்திகள்

மணல் புயல் தாக்கி பலியானவர்கள் குடும்பங்களுக்கு பிரதமர் ரூ. 2 லட்சம் நிவாரணம்

ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட வடமாநிலங்களை சூறையாடிய மணல் புயல் தாக்கி பலியானவர்கள் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளார். #PM #exgratia #sandstormvictims

மாலை மலர்

புதுடெல்லி:

ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட வடமாநிலங்களில் நேற்று புழுதி புயல் புரட்டி எடுத்ததில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகினர். உ.பி.யில் மட்டும் 65-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர்.

இந்நிலையில், மணல் புயல் தாக்கி பலியானவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்சம் ரூபாயும், படுகாயம் அடைந்தவர்களின் சிகிச்சை செலவுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் கருணைத்தொகையாக வழங்க பிரதமர் மோடி இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.

ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட வடமாநிலங்களில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர். #PM #exgratia #sandstormvictims