செய்திகள்

தேர்வு எழுத சென்ற பிளஸ்-2 மாணவி கடத்தல் - போலீசார் மீட்டு உறவினரிடம் ஒப்படைத்தனர்

காலாப்பட்டு அருகே தேர்வு எழுத சென்ற பிளஸ்-2 மாணவி கடத்தி செல்லப்பட்டார். போலீசார் மீட்டு உறவினரிடம் ஒப்படைத்தனர்.

சேதராப்பட்டு:

காலாப்பட்டு அருகே தமிழக பகுதியை சேர்ந்த ஒரு மாணவி காலாப்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

சம்பவத்தன்று தேர்வு எழுத செல்வதாக கூறி சென்ற அந்த மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீசில் புகார் செய்தனர்.

போலீசார் விசாரணை நடத்தியதில் மாணவியை அதே பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் கடத்தி சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து இருவரது செல்போன் டவர் மூலம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் இருவரும் புதுவையில் தங்கி இருந்தது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அந்த மாணவி பெற்றோருடன் செல்ல மறுத்து அடம்பிடித்தாள். இதையடுத்து அந்த மாணவியை அவரது உறவினருடன் அனுப்பி வைத்தனர்.

மேலும் மாணவியை கடத்தி சென்ற லாரி டிரைவரை கண்டித்ததோடு தொடர்ந்து இதுபோன்ற செயலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர். #tamilnews

SCROLL FOR NEXT