மாயம் 
செய்திகள்

ஊத்தங்கரை அருகே பிளஸ்-2 மாணவி மாயம்

ஊத்தங்கரை அருகே பிளஸ்-2 மாணவி மாயமானது குறித்து அவரது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.

ஊத்தங்கரை:

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்துள்ள கண்ணானூர் பகுதியை சேர்ந்தவர் 16 வயது மாணவி. இவர் காரப்பட்டு அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். 

கடந்த 25-ந்தேதி அன்று காலையில் பள்ளிக்கு சென்று விட்டு மாலையில் அந்த மாணவி வீடு திரும்பவில்லை. இதனால் அவரை பெற்றோர் உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. 

இது குறித்து மாணவியின் பெற்றோர் ஊத்தங்கரை போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி வழக்குபதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகிறார்.

SCROLL FOR NEXT