சென்னை:
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் எழுதிய மறுதேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. மறுதேர்வு எழுதிய 519 மாணவர்களில் 180 மாணவர்கள் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. 180 மாணவர்களில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்கள் 63 பேர் மட்டுமே எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியானது. 96.04 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்து உள்ளனர். மாணவியர்களில் 97.49 சதவீதத்தினர் தேர்ச்சியும், மாணவர்களில் 94.38 சதவீதமும் தேர்ச்சி அடைந்து உள்ளனர்.
மாணவர்களை விட 3.11 சதவீதம் மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2716 பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இயற்பியல் - 96.68 சதவீதம், வேதியியல் - 99.95 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி
உயிரியல் - 97.64 சதவீதம், கணிதம் - 98.56 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி
தாவரவியல் - 93.78 சதவீதம், விலங்கியல் - 94.53 சதவீதம் பேர் தேர்ச்சி
கணினி அறிவியல் - 99.25 சதவீதம், வணிகவியல் - 96.44 சதவீதம் பேர் தேர்ச்சி
கணக்குப் பதிவியியல் - 98.16 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி
பிளஸ் 1 தேர்ச்சி - கோவை முதலிடம்
பிளஸ் 1 தேர்வில் 98.10 சதவீதம் தேர்ச்சியுடன் கோவை மாவட்டம் முதலிடம்
பிளஸ் 1 தேர்வில் 97.90 சதவீதம் தேர்ச்சியுடன் விருதுநகர் மாவட்டம் இரண்டாம் இடம்
பிளஸ் 1 தேர்வில் 97.51 சதவீதம் தேர்ச்சியுடன் கரூர் மாவட்டம் மூன்றாம் இடம்
பிளஸ் 1 தேர்வில் 88.68 சதவீதம் தேர்ச்சியுடன் விழுப்புரம் மாவட்டம் கடைசி இடம்