தற்கொலை 
செய்திகள்

ஜோலார்பேட்டை அருகே பிளஸ்-1 மாணவி தற்கொலை

ஜோலார்பேட்டை அருகே தாய் கண்டித்ததால் மனம் உடைந்த பிளஸ்-1 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

மாலை மலர்

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை அடுத்த சின்னமூக்கனூரை சேர்ந்தவர் தங்கம். வெல்டர். இவருடைய மகள் கவுதமி (வயது16).

புதுப்பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். கடந்த 18-ந்தேதி கவுதமி சரிவர படிக்கவில்லை வேலை செய்யவில்லை என அவரது தாயார் திட்டியுள்ளார்.

இதனால் மனம் உடைந்த கவுதமி அன்று இரவு வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து சென்று கழிவறையில் குடித்துவிட்டு மயங்கி கிடந்தார். மகளை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் பல இடங்களில் தேடினர். பின்னர் கழிவறையில் பார்த்தபோது கவுதமி மயங்கிய நிலையில் கிடந்தார்.

அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கவுதமி இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஜோலார்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

பிளஸ்1 மாணவி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.