செய்திகள்

ஆனைமலை அருகே திருமணம் செய்வதற்காக பிளஸ்-2 மாணவி கடத்தல்

ஆனைமலை அருகே திருமணம் செய்வதற்காக பிளஸ்-2 மாணவியை கடத்தி சென்ற வாலிபர் குறித்து மாணவியின் தந்தை போலீசில் புகார் தெரிவித்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாலை மலர்

கோவை:

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள வாகைகொம்பை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 49). இவர் ஆனைமலை போலீசில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது

எனது 17 வயது மகள் திவான்ஷா புதூரில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தாள். சம்பவத்தன்று அவள் எங்களிடம் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றாள்.

ஆனால் பள்ளி முடிந்து நீண்ட நேரம் ஆகியும் அவள் திரும்பி வரவில்லை. அக்கம் பக்கத்தினரிம் விசாரித்த போது எனது மகளை சேலம் மாவட்டம் சேர்ந்த மணி என்பவர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றது தெரியவந்தது. எனவே மைனர் பெண்ணான எனது மகளை மீட்டு தரவேண்டும். 

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார். 

இது குறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி மணவியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்ற மணியை தேடி வருகிறார்கள்.