செய்திகள்

கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்த பிளஸ்-2 மாணவி 3 மாத கர்ப்பம் - போலீசார் விசாரணை

கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்த பிளஸ்-2 மாணவி 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்ததையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

கோவை செல்வபுரத்தை சேர்ந்த 17 வயதுள்ள பிளஸ்-2 மாணவி ஒருவர் நேற்று வீட்டில் இருந்தார். அப்போது அந்த மாணவிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. உடடினயாக அவரது தாயார் மாணவியை சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தார்.

மாணவியை டாக்டர்கள் பரிசோதனை செய்த போது அவர் 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து டாக்டர்கள் மாணவியை ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும் இது குறித்து குழந்தைகள் நல அமைப்பு, மற்றும் செல்வபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து மாணவியிடம் கர்ப்பத்துக்கு காரணம் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

SCROLL FOR NEXT