செய்திகள்

பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் ஜூலை 10-ம் தேதி முதல் விநியோகம்

பிளஸ் 2 தேர்வுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் வரும் 10-ம் தேதியில் இருந்து வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

சென்னை:

எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 முடித்த மாணவ - மாணவிகள் மேற்படிப்புக்காக வெவ்வேறு கல்வி நிறுவனங்களுக்கு விண்ணப்பித்து வருகிறார்கள். அவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுவதால் அசல் சான்றிதழ் வரும்வரை காத்திருக்காமல் கல்லூரிகளுக்கு விண்ணப்பித்து விட முடிகிறது. 

இருப்பினும், சில இடங்களில் அசல் மதிப்பெண் சான்றிதழ் இல்லாததால் கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் விண்ணப்பிக்க மாணவர்கள் சிக்கல்களை சந்திக்க நேர்ந்ததாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில், பிளஸ் 2 தேர்வுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் வரும் 10-ம் தேதியில் இருந்து வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

12ம் வகுப்பு தேர்வெழுதியவர்கள், தாங்கள் பயின்ற பள்ளியில் ஜூலை 10 முதல் அசல் மதிப்பெண் சான்றிதழை பெறலாம் என்று அரசு தேர்வுகள் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT