தீப்பிடித்து எரிந்த விமானம் 
செய்திகள்

ஜார்ஜியாவில் விமான விபத்து- 2 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழப்பு

ஜார்ஜியாவில் சிறிய ரக விமானம் தீப்பிடித்து விழுந்து நொறுங்கியதில் 2 குழந்தைகள் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர்.

மாலை மலர்

அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் வில்லிஸ்டனைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், உறவினரின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக இண்டியானாவுக்கு நேற்று மாலை சிறிய ரக விமானத்தில் சென்றனர். அதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உள்ளிட்ட 4 பேர் மற்றும் பைலட் என மொத்தம் 5  பேர் பயணித்தனர். 

இந்த விமானம் ஜார்ஜியா வான்பகுதியில்  சென்றபோது, திடீரென தீப்பற்றி எரிந்து தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 5 பேரும் பலியாகினர்.